பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முழுதும் நடைபெறும் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனல் அத்துடன் இவர் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் இவரது போதனைகளைப் பக்தியுடன் கேட்டுப் பயன் பெறுவார் களென்று இத்தகைய மஹான்கள் இந்நாட்டிலே தோன்றி வருவார்களானல் ஆரிய பூமியானது மறுபடியும் புராதன காலத்துப் பெருமையைக் காட்டிலும் மேற்பட்ட பெருமைக்கு வந்துவிடும். 41. பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்கவேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிருன். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானல், அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட் டாது. ஆனல் அனுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையுந் தோற்றங்களெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப் பிடித்தாற்போலே மனதிலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தை தியானமென்று கூறுகிருேம். உள்ளத்தில் இவ்வித அக்னியொன்று வைத்துக் கொண்டிருப்போமானல், உலகத்துக் காரியாதி களெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறு படுகின்றன. சுவாமிகள் ஆத்ம நாசத்திற் கிடமான ஒருவகை இன்பத்தையே தியானமாக வைத்துக் கொண்டிருக் கிருர்கள், உலகத்திலுள்ள மெய்யான இன்பத்தை