பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i01 கணக்கான சுவடிகள் படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிருர்கள். சிவாஜிக்கு மகாராஷ்டிர ராஜ்யம் லாபம்; இவ்விருவரிலே யார் சிறந்தவர், இவ்விருவரிலே யார் அறிஞர்? பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லு கிருர்கள். நாம் துணிவு வேண்டும் என்கிருேம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன. 43. கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடைய வராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய் இருக்க லாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஜன ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். நன்மையை விளையச் செய்யினும் செய்யும். ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம்'ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரி யங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிருர்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கை யென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையையுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனகவே இருக்கவேண்டும். ஆனல், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக் கொண்டு அதன் சாயலாகவே தன் கருமங்களைச் செய்து