பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வருபவனல்ல. எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத் தின் நோக்கம் இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய உபாதைகளைக் கழித்துக் கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர். அவர்களெல் லாம். ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கருமங்களை அவரவரறிவிற்குரியபடி செய்து ஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன? ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால் செய்யத்தக்கது. இது, செய்யத்தகாதது இது என்று ஒருவன் அறிந்து, முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத் தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம் நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிருர்கள். ஆனல் கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள் கையை ஒருவன் அங்கீகரித்துக்கொண்டு அதன்படி நடக்க முடியாதவய்ை இருந்தால், அவனும் ஜீவப் பிரேதந்தான். இதிலிருந்து, கொள்கையற்ற மானிடப் பதர்கள், கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள் என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படு கிறது. இவ்விரண்டு வகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும் வரை சோற்றிற்குக் கேடாவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்து போவார்கள். ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத் தின்னும் அரிபூச்சிகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்