பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தான் குடிக்கும் காப்பிக்காகவும், தான் தின்னும் சோற்றிற் காகவும் தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னு டைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானல்ை, அவனை மானிடரில் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்கமுயாது. அவன் சம்பந்தப்பட்டமட்டில், கொள்கைக்கும் செய்துக் கைக்கும் வெகு துாரம் உண்டு. பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங் களையும் இழந்து எங்கேயோ யிருந்து வந்த ஒரு வெள்ளை நிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிருேம். நாம் முப்பது கோடி ஜனங்கள். அவர் இரண்டு லக்ஷங்கூட இல்லை. உலகத்தோர் எல்லோரும் இதை எங்கும் எக்காலத்திலும் இல்லாத அற்புதம் என்று நினைக்கிருர்கள். இதல்ை உலகத்திலுள்ள மற்ற ஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம் ஜனங்களையும்) அடக்கி ஆ ளு ம் ஆங்கிலேயர்களை மகாவீரசூரர் களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக்கொள் வதில்லை. ஆனல் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர் களுக்கு அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. இந்தியன் எங்கே போனலும் நிந்திக்கப்படுகிருன். யாரும் நம்மீது காறித்துப்புகிருர் கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிருர்கள். அப்படி யிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினல் அது ஒவ்வா. ஒழுக்கம். நாம் சுயாதீனம் அடைந்தபிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்களைச் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள். நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரீயும் ஏற்றுக்கொள்ள வேண்டியகொள்கை ஒன்றேதான் உண்டு.