பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டிப் பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கவேண் டியது. இந்தக் கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் இவற்றை நாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப் பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும் அந் தஸ்தையும் இச்சிக்கப்படாது. வீடுவாசல், மனைவி மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே தீர வேண்டும். மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணு யினர். என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவர் தாம் பேடியென்று ஒப்புக்கொண்டு பின்னடைய வேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன் வந்து நிற்க வேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்து விடச் சித்தமாயிருக்க வேண்டும். ஹே பரதா! சோம்ப லுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது. மழை யென்றும், வெயிலென்றும், காற்றென்றும் பசியென்றும் தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே. இந்தச் சரீரமே அநித்தியம் என்ருல், அதையொட்டிய அவஸ்தை கள் நித்தியமாகுமா? இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சி யாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவது தேசிய தர்மத் தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம். சத்தியமே ஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும். உன்னுடையே ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில் எந்தந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட் сит, шт.-7