பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 டிருக்கிருர்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரத மாதா முன் போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே, கைவிடாதே, கைவிடாதே. முக்காலும் சொன்ைேம். வந்தேமாதரம். 44. லோக குரு சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வகலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்து விட்டுப்போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர். விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினர். ரவீந்திரர், உலக வாழ் க் ைக யு ம் , உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத் தில் நிற்பன என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாக பாரதமாதாவில்ை அனுப்பப்பட்டிருக்கிரு.ர். பாரத தேசமே லோக குரு' என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது, வங்காளத்து மஹாகவியாகிய ரவீந்திரநாத தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தப் தொழி லுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர். அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி