107 யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய் விட்டது. "கீதாஞ்சலி முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷை யில் மொழிபெயர்த்தது; வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங் களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்ருல் லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்துவிடாதோ? தெய்வீகக் கதையிலே பத்துப்பக்கம் காட்டினல் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ! கோபோ நகரத்தில் உயேனே என்றதோர் பூஞ்சோலை யிருக்கிறது, அதனிடையே அழகான பெளத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்த மரங் களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்கு நல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம் ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்ப வரும் வியாபார மந்திரியாகிய ரீமான் கோனேவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்த சபைக்கு வந்திருந்தார்கள். நல் வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின் வருமாறு வங்காளி பாஷையில் பேசலானுர் :'எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கிலிஷ் தெரியும்; ஆனால் அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்த பாஷை பேச எனக்கு ஸ்ம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை, ஆனபடியால் ஸ்ரளமாக வராது. ஆதலால் வங்காளியிலே உங்க ளிடம் பேசுகிறேன்' என்ருர். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வாைெருவர் வங்கத்து மொழி தெரிந் தவராதலால் ரவீந்திர நாதரின் வார்த்தைகளை சபை
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/111
Appearance