பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II0 உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும் என்று சந்தேகப் பட் வேண்டாம். பல நூற்ருண்டு நாம் நாகரீக விளக்கைத் தூக்கி நிறுத்தினேம். அப்போது மேற்குலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சியில்லை. நம்முடைய கண் மாலைக் கண்ணில்லை. ஆசியா ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி. ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிருள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானல் ஆத் மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவருதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழக் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும் என்று தெளிவி வித்த பயிற்சி, கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார் என்று காட்டிய பயிற்சி, இவ்வுலகம் ஒரு மூடயந்திர மன்று. இதற்குள்ளே தெய்வ மிருக்கிறது. இது யதேச்சையாக நிற்பதன்று: கண்ணுக்கெட்டாத தொலைவில் வானத்திலிருக்கவில்லை: இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம் இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி. அநாதியாகிய கிழக்கு திசையில் புதிய ஜப்பான் தாமரைப் பூவைப்போல் எளிது தோன்றிவிட்டாள். பழைய மூடா சாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள்; நவீன யுகத்தின் ஸம்மானங்களே நிர்ப்பயமாகக் கேட்டாள்.