பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 பாரத பூமி உலகத்தாருக்கு எவ்விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தை ஒரிரண்டு சொல்லி முடித்து விடுகிறேன். செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நா டி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித்தொழில் செய்கிறது என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நமது ஜகதீச சந்திர வஸ்". உலோகங்களிலும் இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிரு.ர். ஒளி நூலில் மஹாவித்வான். தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை மார்க்கோனி' பண்டிதர் உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப் பற்றி துல்லியமான ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார். செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி யெங்ங்னமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே இவர் மனித சாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது. இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸ்வினிடம் மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமான கருவிகள் வேண்டும். ஜகதீச வஸ்வின் ஆராய்ச்சிக் கருவிகள் கல்கத்தாவில் நமது தேசத் தொழி லாளிகளாலே செய்யப்படுவன. ஐரோப்பிய ராஜதானி களிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத் தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால் அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்ளுகிரு.ர்கள். சாஸ்திரம் பெரிது. சாஸ்திரம் வலியது. அஷ்டமஹா சித்திகளும் சாஸ்திரத்தில்ை ஒரு வேளை மனிதனுக்கு வசப்