பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 "தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிரு.ர்கள். இதன் அர்த்தத்தை அவர்கள் நன்ருக மதியினலே பற்றிக் கொள்ளவில்லை. 'தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.' ஆம், அதன் பொருள் முழுவதையும் கண்டாயா சாத்தன் எழுதுகிருன், கொற்றன் எழுதச் சொல்லுகிருன். எழுதுவோன், எழுதுவிப்போன்-இரண்டும் தெய்வம். பன்றி சாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம், எதினிலும் உள்ளே நிரம்பிக் கிடக்கிறது என்ருல், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம். 'இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரங் கொண்ட மூடன் நான் செய் கிறேன்’ என்று நினைத்துக் கொள்ளுகிருன்' என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிருன். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். அவனன்றி ஒர் அணுவும் அசையாது. "என் செயலாவது யாதொன்று மில்லை.” நமக்குப் பொறுப்பில்லை, தொல்லையில்லை, செய்கை யில்லை; கடமை மாத்திரம் உண்டு. ‘கடமையில் உனக்கு அதிகாரம், பயணிலே இல்லை’ என்பது கீதை. 'செய்கையில்லாது நீங்கிவிடுவது' என்ருல், சோம்பேறியாய் விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்ரும் அத்தியாயத்தை ஒவ்வொரு ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும். முதலாவது விஷயம்:- ஒருவிதமான செய்கையு மில்லாமல் சும்மாயிருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பிலுைம் விரும்பா விட்டாலும்