119 பாட்டை மறந்து மகமதியர்களும் ஹிந்துஜன சமூகத்தில் ஒரு கிளையராகவே கருதப்படுகிருர்கள் என்பது வாஸ்தவ மென்ற போதிலும், பொதுவாக இம்மாகாணத்திலும்கூட வடஇந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஹிந்து, மகமதி யர்கள் ஒருவிதமான பரஸ்பர துவேஷம் கொண்டவர் களாகவே இருக்கிருர்கள். இதற்குக் காரணம் மகமதிய ஆட்சியில் ஏற்பட்ட துவேஷமே. இந்த விரோதங்களை நீக்கி இந்த இரண்டு ஜாதியாருக் குள்ளே சிநேக உணர்ச்சியும், சகோதரப் பான்மையும் ஏற்படுத்துவது இத் தேசாபிமானிகளின் முக்கிய கடமை யாகும். ஆனால், ஒரு நோயைத் தீர்க்க விரும்புவோன் அந்த நோயே இல்லையென்று பிரமாணம் செய்துவிடுதல் மிகவும் சிறப்பான உபாயமில்லை. ஹிந்து மகமதியருக் குள்ளே விரோதங்களைத் தீர்க்க விரும்புவோர் மேற்படி விரோதங்களே இல்லையென்று சாதித்து விடுதல் சரியான பாதையாக மாட்டாது. திருஷ்டாந்தமாக கல்கத்தாவிலே நடந்த சிவாஜி உற்சவத்தை எடுத்துக்கொள்வோம். எவ்விதமான ஆபத்திலும் ஹிந்துக்களை விட்டு நீங்காத மகாதேசாபிமானிகளாகிய வியாகத்ஹ-சேன் போன்றவர் கள்கூட அந்த சமயத்திலே சிவாஜி உற்சவத்தினின்றும் விலகி இருந்துவிட்டார்கள். சிவாஜியை தெய்வாம்ச மென்றும், மகாத்மாவென்றும் ஹிந்துக்கள் ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்கும் போது, அவர் கொலையாளி என்றும், பாதகர் என்றும் அநேக மகமதியர்கள்'இங்கிலீஷ் மான்' பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கிருர்கள். மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்கு மிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத் தைப்பற்றி பயமேற்படுகின்றது. 'கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும்' நடக்குமானல் எதிரிக்கு எப்பொழுதும் சந்தோஷமேயல்லவா? இதற்காக, நம்மவர்கள் பெரும்
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/123
Appearance