பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாடுபட்டு ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் இடையே யுள்ள பகைமையாகிய கழியை கடக்க முயலவேண்டும். அந்தக் கழியிலே இருக்கும் கற்களும், பாறைகளும் எண்ணிறந்தனவையாகும். இதைக் கடக்கும் போது எத்தனையோ ஆப்த்துக்களும் துன்பங்களும் நேரிடக்கூடும். ஆனால், விடாமுயற்சி, பொறுமை, தீரத்துவம், கருணை என்னும் சிறந்த மாலுமிகளைத் துணையாகக்கொண்டு நாம் செல்லவேண்டும். நம்மால் கூடியவரை முயற்சிசெய்து விட்டுப் பலனை தெய்வத்திற்கு விட்டுவிடுதலே பொருந்தும். 'பசுவைக் கொல்லுவோர்' 'பசுவை வணங்குவோர்' ஆகிய இந்த இரண்டு வகுப்பினரும் எத்தனைக் கெத்தனை சீக்கிரமாக நெருங்கத் தொடங்குகிருர்களோ, அத்தனைத் கெத்தனை நலமுண்டாகும். மகமதியர்களும் இந்தப் பெரும் முயற்சியிலே தம்மாலியன்ற அளவு ஒத்து முயலவேண்டு மென்று மிகவும் ஆவலுடன் பிரார்த்தனை செய்து கொள் கின்ருேம். நன்றி-பாரதி தரிசனம்-முதற் பாகம். 47. பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல் 1906 ஆகஸ்டு 4 அமெரிக்க ஐக்கிய மாகாணக் குடியரசானது இவ்வுலக ராஜாங்கங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் நாகரீகம், செல்வம், வன்மை, பெருமையென்ற அனைத்தி அலும் சிறப்பு மிகுந்ததாக விளங்குகிறது. இதன் அதிபராக இப்போது மிஸ்டர் ரூஸ்வெல்ட் பரிபாலனம் செய்கிரு.ர். இவருக்கப்பால், இந்தப் பதவிக்கு வரும்படியான நிலைமை