பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I2] யிலிருப்பவர் மிஸ்டர் ப்ரயனேயாவார். மிஸ்ட்ர்ப்ேரயன் உலகத்து ராஜதந்திரிகளுக்குள்ள்ே விசேஷமான அறிவு வன்மையிலும், ஒழுக்க மாண்பிலும், நீதிப்பற்றிலும் முதல் வகுப்பைச்சேர்ந்தவர். இவர் சொல்லும் வசனங்களை உலகத்து விற்பன்னர்களும் ராஜதந்திரிகளும் மிகுந்த மரியாதையுடனும் சிரத்தையுடனும் கவனிக்கக் கடமைப் பட்டிருக்கிருiர்கள். இந்த ராஜதந்திரி சிலதினங்கள் முன்பு இந்தியாவில் பலபர்கங்களிலே யாத்திரை புரிந்து சென் முர். அப்ப்ோது இவ்ர் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சிபுரி யும் மாதிரிகளைநன்ருய்க் கவனித்து தேர்ச்சியடைந்து இருக் கிருர். இத்ையெல்லாம் பற்றி இவர் தம்து தேசத்திலுள்ள "ஸ்ன்' என்னும் பத்திரிகையொன்றுக்கு 4 பத்திகள்'வ்ரக் கூடியதர்கப்பெரிய கடித்மொன்று அனுப்பியிருக்கிரு.ர். அந்த மஹாஅற்புதமான உபந்நியாசத்தை அடுத்த முறை நமது பத்திரிகையிலே மொழிபெயர்த்தெழுத உத்தேசித் திருக்கின்ருேம். இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் அநீதி குரூரமாக இருத்திருக்கிறதென்பதை எத்தனையோ பலமான விவகாரங்களால் சித்தாந்தம் செய்கிரு.ர். இந்தியாவின் விவகாரங்களையெல்லாம் அதிநுட்பமாகப் படித்தறிந்து இவர் எழுதியிருக்கும் கடிதத்தை நோக்கும்போது இவருடைய புத்தி பலத்தைப்பற்றி அளவிறந்த ஆச்சரிய முண்டாகிறது. இங்கிலாந்தின் லாபத்தையே மட்டுமின்றி இந்தியாவின் லாபத்தைச் சிறிதேனும் கவனியாமல் ஆளும் அநியாயம்; வாக்குத் தவறுதல்; இந் நாட்டுச் செல்வத்தை கொள்ளையிட்டுப் போதல்; மரண விகிதத்தின் அதிகரிப்பு; தேச வருமானத்தின் பெரும் பங்கு அனவசியமானசேனைக் காப்பிலே கொண்டு கொட்டுதல்; நீர் பாய்ச்சல், உரம் முதலிய விவசாய நலன்களைக் கவனியாமை, நிலவரியின் கொடுமை; மற்றத் தீர்வைகளின் பாரம்: ஜனங்களுக்குச் சுயாட்சி கொடுக்காமல் இருப்பதற்கு பிரிட்டிஷார் பா. பா.-8