பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 மர்கக் கொண்டவர், மார்லியின் 'வரவு செலவு கணக்கு'ப் பிரஸங்கத்தைப்பற்றி ஜஸ்டிஸ் (நீதி) என்ற லண்டன் பத்திரிகையிலே ஒரு விஷயம் எழுதியிருக்கின்றர். இந்தியாசி ற்து சிறிதாகச் செழிப்படைந்து வருகிறதென்று மிஸ்டர் மார்லி கூறியிருப்பதைப்பற்றி இவர் கண்டனை புரிந்து பேசுகிருர் : இவரது விவகாரங்கள் பின்வருமாறு :- (17 7ம் வருஷம்) பிளாஸி சண்டை முதலாக (1815ம் வருஷம்,) வாடர்லு சண்டை வரை இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்றது நூறு கோடி (100, 000, 000) பவுன். அதற்கப்பால் 1875-ம் வருஷம் முதல் 1906-ம் வருஷம்வரை குறைந்தபrம் மற்ருெரு நூறு கோடி (100, 000, 000) பவுன் பிரதியுபகாரமில்லாமல் வாரிச் சென்றிருக்கிரு.ர்கள். இன்றும் வருஷந்தோறும், இந்தியாவிலிருந்து பிரதி பிரயோஜன மில்லாமல் 3 கோடி (30,000, 000) பவுன் எடுத்துக் கொண்டுபோகிருர்கள். இந்தியாவிலேயே அன்னியர்கள் (20, 000, 000) 2 கோடி பவுன் சம்பளமாக எடுத்துக் கொள்கிருர்கள். இவ்வாறு இந்தியாவின் இரத்தத்தை அன்னியர்கள் உறிஞ்சுவதால் இங்கே பஞ்சமும், பிளேக்கும் ஜனங்களைப் பதியிைரக்கணக்காக விழுங்குகின்றன. மரணத்திட்டம் வ ரு ஷ ந் தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக்காட்டிலும், பெரிய அநீதி எந்தக் காலத்திலும், எந்த ராஜாங்கத்தாரா லேயும் செய்யப்பட்டதே கிடையாது. மிஸ்டர் மார்லி மேற்கண்ட விஷயங்களையெல்லாம் மிக நன்ருய் அறிவார். அப்படியிருந்தும் அவர் இந்தியா செழிப்படைந்து வருகிறதென்பதற்கு "நிதரிசனம்' காட்டப் புகுந்துவிட்டார். இந்தியா கடன்கார தேசமாகி