49. இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ரொட்டித் துண்டம் 1906 டிசம்பர் 1 'அழுதபிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்று வதுபோல (இன்னும் ஒரு நல்ல பழமொழி இருக்கின்றது. அதை எழுத நமக்கு கூசுகின்றது.) இந்தியர்கள் கேட் பதற்கு இடையிடையே சொற்ப அனுகூலங்கள் கவர்ன் மெண்டார் செய்து வருகின்ருர்கள். ஆனல் ஆராய்ந்து பார்க்குமிடத்து இந்த அனுகூலமும் நமக்குத் தீமையாகு மன்றி நன்மையாகமாட்டாது. 'ஸர்க்காரில் இந்தியர் களுக்கு உயர்ந்த பதவி கொடுக்கவேண்டும், உயர்ந்த பதவி கொடுக்கவேண்டும்' என்று நிதானக் கட்சியார் கூச்சலிடுகிருர்கள். இதன் பலன் என்னவாயிற்று? நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை உத்தியோகங்கள் நமக்குக் கொடுக்கவேமாட்டார்கள். கொடுக்கும் விஷயத் தில் அவர்களுக்குப் பிழைப்பில்லாமல் போய்விடும். நீதி இலாகாவில் மட்டும் ஓரிரண்டு பெரும் பதவிகள் கொடுத் திருக்கிருர்கள். இதல்ை நமது நாட்டிற்குக் கெடுதியே தவிர நன்மை கிடையாது. நமக்குள் நல்ல தேசபக்தர் களாகவும் ஜனத் தலைவர்களாகவும் இருப்போர்களுக்கு தக்க சம்பளங்களை லஞ்சமாகக் கொடுத்து கவர்ன்மெண் டார் தமது வசப்படுத்திக்கொள்ளுகிருர்கள். இதல்ை முப்பது கோடி ஜனங்களிலே ஒரு மனிதனுக்குச் சிறிது பண லாபமும், தேச முழுமைக்கும் நஷ்டமும் ஏற்படுகின்றது. ஐயோ! இந்தவிதமான சொற்ப லாபங்களுக்கெல்லாம் நாம் ஆசைப்பட்டா வாழப்போகிருேம்? ஜப்பான் தேசத்திலே சுதேசிய ராஜாங்கம் இருந்த போதிலும் அந் நாட்டு ஜனங்கள் ஸர்க்கார் உத்தியோகங்களிலே
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/130
Appearance