பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 I ரையும் மேன்மேலும் பேறுவதாய்ப் போய்விடும். இதுவரை செய்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திரஸ் கரித்தும் மாறுபடுத்தியும் நமது எண்ணத்தை நிறைவேற்ற மனமில்லாத ராஜாங்கத்தாரிடம் இன்னும் கெஞ்சுவ தானுல் நமது மூடத்தனம் எத்தன்மையது பாருங்கள். ஆங்கில ராஜாங்கத்தார் கேள்விக்கு ஒப்பி நடப்பது எப்போதெனில், செய்யாவிடில் அபாயம் நேருமெனத் தெரிந்தால்தான். அமெரிக்கர்கள் வாய்ப்பேச்சில் சாயாத போது ஜனங்களைக் கூப்பிட்டபோதுதான் அவர்களுடைய சுயாட்சியின் உரிமை வெளிவந்தது. அதைக் கண்டுதான் பிரிட்டிஷார் ஆளும் திறமையை மதிப்பிடுகின்றனர்” என்று 'வந்தே மாதரம்' கூறுகிறது. -நன்றி-பாரதி தரிசனம்-இரண்டாம் பாகம் 51. நமது ஞாபகத்திற்கு 1907 ஜனவரி 11 சென்னைவாசிகாள்! நமது இந்தியாவானது மற்ற தேசங்களைப் போலல் லாமல் ஒரு விசித்திர தேசமாக இருக்கிறது. ஜப்பான் (அருணதேசம்), இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய ஐரோப்பிய தேசங்களும் மற்ற ஆசியா தேசங்களும் ஜன அரசர்களால் ஆளப்பட்டு, தங்கள் நன்மையின் விருத் தியையே அதிகப்படுத்திக் கொண்டுவர நம் இந்தியா மாத்திரம் வெகுகாலமாக அன்னிய தேச அரசர்களால் ஆளப்பட்டு மகா தாழ்மையை அடைந்திருக்கிறது. மகரிஷி களாலும், ஆழ்வார் முதலிய திராவிட புண்ணிய புருஷர் களாலும் நிறைந்திருந்த இத்தேசம் இப்போது என்ன கதியிலிருக்கிறது பாருங்கள். நம்முடைய பூர்வீகர்கள்