பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 லிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும். இதை நம்முடைய மகாப்புலிகளான ஜனத்தலைவர்கள் அறியவேண்டும். வருஷம் ஒன்றுக்கு ஸ்வர்ணமாக 30 கோடி ரூபாய் இங்கிலாந்துக்குப் போகிறதைக் கருப்பு மனிதர்களாயும், அடிமைகளாயும், பேடிகளாயுமுள்ள நமக்கு ஏன் அவர்கள் கொடுக்க வேண்டுமெனத் தெரியவில்லை. அவர்களை, "தர்மமானவர்களே தர்மபாலர்களே! நீங்கள் மகா தர்ம சிந்தை உள்ளவர்கள் பிரபுக்கள் என்று பெயர் பெற்றி ருக்கிறீர்கள். அப்பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் அடிமைகளாய் உள்ள எங்கள் சில வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். அது என்னவெனில் ஆங்கிலேயர் களால் முற்றிலும் நிறையப்பட்ட உத்தியோகங்களில் நியமிக்க வேண்டும். விக்டோரியா ராணி இந்தியர்களையும் ஆங்கிலேயர்களையும் எவ்வித்தியாசங்களின்றி ஆளுவதாகச் சொல்லவில்லையா? அதற்கு விரோதமாக செய்ய நியாய மில்லை' என்று சென்ற 20 வருஷ காலங்களாக காங்கிரஸ் மூலமாகச் சொல்லியும், விண்ணப்பப் பத்திரிகைகள் அனுப்பியும் வேண்டியும் கெஞ்சியும் இன்னும் பல விதங்களால் பிரயத்தனித்தும் வீண் என்று இன்னும் நம்மிடையே மகா கீர்த்தி பெற்ற ஜனத் தலைவர்கள் நினைக்கவில்லையே. இது என்ன மூடத்தனம். இவர்கள் தங்கள் சகோதர இந்தியருக்கு "ஏ சகோதரர்களே, சென்ற 20 வருஷ காலமாய் ஆங்கிலேயர்களுக்கு நம்முடைய கஷ்டங்களைத் தெரிவித்தும் பிரயோஜனமில்லாமல் போய் விட்டது. ஆகையால் இனிமேல் அவர்களை நெருங்கிக் கேட்பது பிரயோஜனமில்லை. நாமே வேறு ஏதாவது வழியைத் தேடவேண்டியது முக்கியம். இனிமேல் காலத்தை முன்வழியில் செய்வது (செலுத்துவது)