52. சென்னவாசிகளின் கிதானமும் விபின சுந்திரபாலரின் சங்கிதானமும் 18 GւD 1907 சென்னைவாசிகளின் நிதானமெல்லாம் சந்திரபாலரின் சந்நிதானத்திலே பறந்து காற்ருய்ப் போய்விட்டது. நேற்று மாலை விக்டோரியா நகரமண்டபத்தில் லாலா லஜபதிராய் தீபாந்தரத்திற்கேற்றி அனுப்பப்பட்ட வி ஷ ய ம ா க மஹாஜன சபையாரால் கூட்டப்பெற்ற பெருங்கூட்டத்தில் நடந்த செய்திகளை நேரே வந்து கண்டவர்களெல்லாம் இனி மயிலாப்பூர் வக்கீல்கள் ஜனத் தலைவர்களென்று மூச்சுவிடக்கூட இடமில்லை யென்பதை நன்முக அறிந் திருப்பார்கள். நேற்று மாலை மீட்டிங்கிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின் வருவனவாகும்: 1. இதுவரை பழைய கட்சிக்காரருக்கு முக்கிய தர்ம மாக இருந்த விண்ணப்ப முறைமையை நேற்று அவர்கள் தாமாகவே பேதமையாகு மென்று நிறுத்திவிட்டனர். அப்படி அவர்கள் விண்ணப்பம் செய்ய விரும்பாத போதிலும் வெறுமே இந்தியா மந்திரிக்கு மீட்டிங்கைப்பற்றித் தகவல் கொடுக்கவேண்டு மென்று மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யர் சொன்ன தைக்கூட ஜனங்கள் அங்கீகரிக்காமல் கோப மடைந்தார்கள். மயிலாப்பூர் வக்கீல்கள் தாம் ஜனத் தலைவர்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தது பொய்க் கானவென்பதை அறிந்து கொண்டார்கள்.
பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/139
Appearance