பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 கற்றுக் கொடுக்காமல், 'அன்மொழித் தொகையாவது யாது?’ என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும் போது கொஞ்சம் சிரிப்புண்டாகிறது. அன்மொழித் தொகை சிலரைக் காப்பாற்றும், ஊர் முழுதையும் காப்பாற்ருது. நெல்லுத்தான் ஊர் முழுதை யும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளிவிட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனல் அன்மொழித் தொகையைப் பயிர் செய்து நெல்லை மறந்து விடுவது சரியான படிப்பில்லையென்று சொல்கிறேன். அவ்வளவுதான். 55. ஜப்பான் தொழில் கல்வி 12 பிப்ரவரி, 1916. தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந் தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும்-ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக் காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மையடைந்திருக்கிருர்கள். அப்படிப்பட்ட தேசங் களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகை களாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்ருகத் தெரிந்துகொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில் களும் சாஸ்திரங்களும் கற்றுக்கொண்டு வரும்படி செய் வதே பிரதான உபாயமாகும். தொழில் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸ்மானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம்,