பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை 25 மே, 1916. பாரத நாட்டுக்கு உடனே சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு, இந்த கடினமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்பவேண்டும். ஐரோப்பாவில் நடக்கும் யுத்த நெருக்கடியிலே நாம் உள்நாட்டுத் திருத்தங்களுக்கு மன்ருடுவதனால் நாம் ப்ரிட்டிஷ் ராஜாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய கடமை தவறிப் போகுமென்று சொல்லி நமது முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புவோரின் அர்த்தமில்லாத வார்த்தையைக் கருதி இக் காரியத்தை நிறுத்தி வைக்கலாகாது. அயர்லாந்து, போலந்து என்ற தேசங்களின் திருஷ் டாந்தத்தைக் காட்டலாம். புதுச்சேரி, சி. சுப்பிரமணிய பாரதி 57. தெலுங்க மஹா சபை 9 ஜூன், 1917 சென்ற வெள்ளிக்கிழமையன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ரீ வேங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்நியாஸம் கவனிக்கத் தக்கது. ராஜநீதி சாஸ்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமை யுடையார்............... மேற்படி கொள்கைக்கு நல்ல திருஷ்டாந்தமாக, இக் காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக்