பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அதாவது, மதருஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாரட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்க நாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்கவேண்டும். 4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்றவரை ஸ்வபாஷை யில் நடக்கவேண்டும். மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்ருவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி; இரண்டாவது மற்ருெரு பகுதி. இரண்டாவது தாய்ப் பகுதி; மற்றவை கிளைப் பகுதிகளாகும். என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கை யெல்லாம், நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும், இந்த ஸமயத்தில் ஆந்திரரைத் தனிப் பிரிவாக ருஜுப் படுத்துவதைக் காட்டிலும், ஆஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூல மந்திரத்தை நிலைநாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்று கிறது. ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸ்ஹோதரர். பாரத பூமியின் மக்க ளெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் மதபேதம் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோ ரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று. ஹிந்துக்கள் உயர்ந்த நிலைமைக்கு வரவேண்டுமானல் ஐக்யநெறியை உடனே அனுசரிக்கவேண்டும். போன வருஷம் கீழ்க்கடலோரத்திலே பெரிய புயற்காற்றடித்தது.