பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 ஒன்றுகூடியிருந்த வீடுகள் பிழைத்தன. தனிக் குடில் களெல்லாம் காற்றிலே பறந்துபோயின. உலகத்தில் புதிய ஞானம், புதிய வாழ்க்கை, புதிய அறம், புதிய நெறி தோன்றக்கூடிய காலம் பிறந்துவிட்டதென்று மேதாவி களெல்லாம் ஒருங்கே சொல்லுகிருர்கள். இங்ங்ணம் புதிய ஞானம் பிறக்க வேண்டுமானல் அதற்கு ஹிந்து மதமே முக்ய ஸாதனமென்று நாம் சொல்லுகிருேம். ஸ்வாமி விவேகாநந்தர், ரவீந்திரநாத டாகுர், ஜகதீச சந்திர வஸ முதலிய பெரியோர்களும் அங்ங்ணமே சொல்லுகிருர்கள். இந்த ஸமயத்தில் ஹிந்துக்கள் பிரிவு பேசலாமோ? ஹிந்துக்கள் பிரிந்துகிடந்தால், ஹிந்து தர்மத்தின் மஹிமையை உலகத்தார் காண்பதெப்படி? ஹிந்து தர்மம் பெருமாள் கோயிலைப்போலே; நிற்பது எங்கே நின்ருலும் அத்தனை பேருக்கும் ப்ரஸாத முண்டு. பகவத் ஸந்நிதியில் ஜாதிபேதமில்லை. அத்தனை பேரும் கலந்து நிற்கலாம். ஹிந்து தர்மம் சிதம்பரத்தைப் போலே. அதனுள்ளே, பறையரும் ஒளியில் கலந்து விடலாம். 58. கூடித் தொழில் செய் இங்கிலீஷ், ஸ்மஸ்கிருதம், தமிழ் என்ற பாஷைகளில் ஏதேனும் ஒன்று படித்து யாதொரு உத்தியோகமு மில்லாமல் சும்மா இருக்கும் பிள்ளைகளுக்கு நான் ஒரு யோசனை கண்டுபிடித்துக் கொடுக்கிறேன். இஷ்டமானல் அனுசரிக்கலாம், அனுசரித்தால் லாபமுண்டு. கூடி வினை செய்வார் கோடி வினை செய்வார்