பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, கிராமந்தோறும் யாத்திரை செய்யுங்கள். ஊரூராகப் போய் பள்ளிக் கூடங்கள் போடுவதே கைங்கரியமாக வைத்துக்கொள்ளுங் கள். ஆரம்பத்தில் வண்டிச் செலவுக்குப் பணமில்லை யால்ை நடந்து போகவேண்டும். மற்றபடி ஆஹார வ்யவஹாரங்களுக்கு நமது பூர்வ மதாசார்யார்களும், தம்பிரான்மாரும், ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் செய்தபடியே செய்யுங்கள். எங்கே போனலும் உயர்ந்த மதிப்பும், உபசாரங்களும் ஏற்படும். கூட்டத்துக்கு விருந்து காட்டிலேகூடக் கிடைக்கும். அங்கங்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், கு டி ைசப் பள்ளிக்கூடங்களும் போட்டுத் திறமையுடையோரை வாத்தியாராக நியமித்துக் கொண்டு போகலாம். யாத்திரையின்பம், தேசத்தாரின் ஸத்காரம், வித்யாதான புண்யம், சரித்திரத்தில் அழியாத கீர்த்தி இத்தனையும் மேற்படி கூட்டத்தாருக்குண்டு. படிப்பு எல்லா மதங்களுக்கும் பொது. எல்லா தேசங் களுக்கும் பொது. எல்லா ஜாதிகளுக்கும் பொது. திருஷ் டாந்தமாக, ஐரோப்பியர் அதிகப் பயிற்சி செய்திருக்கும் ரஸாயனம் முதலிய சாஸ்த்ரங்கள் நமக்கு மிகவும் அவஸரம். எவ்விதமான பயிற்சிக்கும் தேச பாஷைகள் எழுதவும் படிக்கவும் செய்விப்பதே ஆதாரமாகும். அதை முதலாவது வேரூன்றச் செய்யவேண்டும். ஹிந்துப் பிள்ளைகளே, உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. கூட்டங் கூடி நாட்டைச் சுற்றுங்கள். தமிழ் வளர்ந்தால் தர்மம் வளரும். பிராமணர் முதலாகப் பள்ளர் வரை யிலும், எல்லா ஜாதிகளிலும், எழுதப் ப்டிக்கத் தெரிந்த வர்கள் மிகுதிப்பட்டால் அநாவசியப் பிரிவுகள் நிச்சய மாகக் குறைவுபடும். நமக்குள் கைச்சண்டை மூட்டி விடுவோரையும், பாஷைச் சண்டை, சாதிச் சண்டை மூட்டிவிடுவோரையும் கண்டால் ஜனங்கள் கைகொட்டிச்