பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 சிரிப்பார்கள். ஹிந்துக்களாகிய நாமெல்லாரும் ஒரே கூட்டம், ஒர்ே மதம், ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடும்பம், ஒரே உயிர் என்பதை உலகத்தார் தெரிந்து கொள்ளுவார்கள். அதனல் பூமண்டலத்துக்கு rேம முண்டாகும். 59. ஹிந்து மகம்மதிய ஒற்றுமை இந்த விஷ்யத்தைப் பற்றி ஒங்கோல் என்ற ஊரில் வக்கீல் வேலை பார்க்கும் நாராயண சாஸ்திரி என்பவர் 'ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிரு.ர். ஹிந்து-மகம்மதியருக்கிடையே பரஸ்பர ம தி ப் பு ம் அன்பும் அதிகப்படும்படி செய்வதற்கு அவர் சில வழிகள் குறிப்பிடுகிரு.ர். அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு : 1. ஹிந்துக்களில் சிலர் மஹம்மதிய வேத சாஸ் திரங்களைப் படித்து அவற்றிலே தேர்ச்சி பெற வேண்டும். 2. அங்ங்னமே, மஹம்மதியர்களில் சிலர் ஸ்மஸ் கிருதம் படித்து ஹிந்துக்களுடைய வேத சாஸ் திரங்களை அறிந்துகொள்ள வேண்டும். 3. ஹிந்துக்களுடைய மனத்திலே மஹம்மதியர் நமது தேசத்தார் என்பதும், இஷ்ட தேவதை வேருக இருப்பதைப்பற்றி அவர்களே மிலேச்ச ரென்று நினைப்பதுகூடப் பிழையென்பதும் நன்ருக ஞாபகமிருக்கவேண்டும். 4. மஹம்மதியரும் அங்ங்னமே ஹிந்துக்களை காபிர் (அவிசுவாஸிகள்) என்று நினைப்பது பெரிய தவறென்று தெரிந்துகொள்ளவேண்டும்.