பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 'இன்று ஜூலை நாலாந்தேதியன்று (ஆங்கிலேய ராகிய) நாமெல்லோரும் நம்முடைய அமெரிக்க ஸ்கோதர ருடன் கலந்து ஐக்ய நாடுகளின் விடுதலையை ஆவலுடன் கொண்டாடுகிருேம்." இன்று ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தைகளையும், செய்யும் செய்கைகளையும் 142 வுருஷங்களுக்கு முன்பு சொல்லியும், செய்துமிருப்பார்களாயின் தேசத்துரோகி களென்றும், கலக்காரரென்றும் சொல்லி மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். இதனைப் பல ஆங்கிலேயர் இப்போது நினைத்திருக்கக்கூட மாட்டார்கள். அதே ஆங்கி லேயரில் சிலர் இக்காலத்தில் “விடுதலை பெற நியாயமாகப் போராடும் வேறு சில ஜாதியார் விஷயத்தில் என்ன மாதிரியான வார்த்தை சொல்லுகிருர்கள்? இங்கு ஒரு முக்யமான பேதத்தை மேற்படி லண்டன் நிருபர் மறந்து விட்டார். ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவி யால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது. இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிடமிருந்து ஸ்மாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக்கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது. 'உபாயத்தால் ஸாதிக்கக் கூடிய காரியத்தைப் பராக் கிரமத்தால் ஸாதிக்கமுடியாது" என்று பஞ்ச தந்திரம் கூறுகிறது. மேலும் நமக்கு ஆங்கிலேயர் ஸமாதான மாகவே ஸ்வராஜ்யம் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பதற்குக் காலதேசவர்த்தமானங்கள் மிகவும் அனு கூலமாகவே யிருக்கின்றன.