பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156) எங்ங்னமெனில் மந்திரி மிஸ்டர் மான்டேகுவும், ராஜபிரதிநிதி லார்டு செம்ஸ் போர்டும் சேர்ந்து தயார் செய்திருக்கும் சீர்திருத்த ஆலோசனைப் புஸ்தகத்தில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். "இந்தியாவின் எதிர்கால நிலை டில்லி நகரத்திலேனும் ஸிம்லாவிலேனும் வைட் ஹாலிலேனும் நிச்சயிக்கப் படுவதன்று. ப்ரான்ஸ் தேசத்துப் போர்க்களங்களிலே நிச்சயிக்கப்படும்' என் கின்ருர்கள். இங்ங்னம் மந்திரியும் ராஜப்பிரதிநிதியும் கூறுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனினும் நேசக் ககதியாருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க முடியுமென்று அவர்கள் சொல்வ தாகவே நாம் பொருள் கொள்ள நேர்கிறது. இதனிடையே இந்தியாவில் இந்து மஹமதிய பேதங் களிருப்பதாகக் காட்டி அதனின்றும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கத் தகாதென்று சொல்லும் ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் முதலிய வெளிநாட்டு, உள்நாட்டு துரோகிகள் எல்லார் வாயிலும் பூரீமான் ஸய்யது ஹசேன் இமாம்-நமது விசேஷ ஜன சபைக் கூட் டத்தின் அதிபதி-மண்ணைக் கொட்டி விட்டார். 'எல்லா வகுப்புகளும் இப்போது கொண்டிருக்கும் ஐக்ய புத்தியை யும், எல்லார் நலமும் ஒன்றென்ற கருத்தையும் எதிர்க்க முடியாது” என்று அவர் சொல்லுகிரு.ர். மேலும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் மிகவும் அவசிய மென்பதை விளக்கிக் காட்டும் பொருட்டாக நீதி நிபுண ஸய்யது ஹஸேன் இமாம் ஸாஹப் சொல்லும் பின்வரும் வாக்கியங்களுக்கு ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் என்ன மறுமொழி சொல்லக்கூடும்? ஹஸேன் இமாம் கூறு கின்ருர்: