பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அந்தக் கொள்ளை சாஸ்த்ர தோரணையில் நடந்து வரு கிறது!’ என்று நம்முடைய ஜன சபைத் தலைவர் சொல்லு கிரு.ர். "இஃதெல்லாம் ஜனங்களுக்குத் தெரியும். இது அவர்கள் நெஞ்சை உறுத்துகிறது. எனவே பண்டைச் செயல்களுக்கெல்லாம் இப்போது (ஆங்கில அதிகாரிகள்) பரிகாரம் அல்லது ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று ஜனங்கள் கேட்கிருர்கள்' என்று கூறி ஸ்ய்யது இமாம் முடிக்கிருர். இதுதான் விஷயம் முழுவதும். இவ்வித அதிகாரிகளின் கையினின்று நம்மை மீட்டு நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியிடம் அழுத்த மாகப் ப்ரார்த்தனை செய்கிருேம். எங்களுக்கு உடனே ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டு மென்று வணக்கத்துடனும் எங்களுடைய பரிபூரண ஜீவ பலத்துடனும் ப்ரார்த்தனை செய்து கொள்ளுகிருேம். 61. இதன் பெயரென்ன? (குறிப்புகள் என்ற கட்டுரைப் பகுதி) 21 ஜனவரி 1920 லண்டன் 'டைம்ஸ் பத்திரிகையில் ஸர் வாலன்டைே கிராஸ் பின்வருமாறு பரிதபிக்கிருர்: பத்து வருஷங்களின் முன்னே டில்லி நகரத்துக்கு வெளியே, இந்தியாவில், பண்டு இஸ்லாமிய ஆதிக்க மிருந்ததற்குச் சிறந்ததொரு சின்னமாகிய குதுப்மினர் என்ற கோரியின் கீழே ஒரு நாள் காலையில் சில மஹமதிய நண்பர்கள் என்ைேடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந் தனர். இனி இந்திய ஸ்வராஜ்யமும், ஹிந்து ஆதிக்கமும்