பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I55 ஐர்லாந்துக்கு ஏறக்குறை இந்த முறை ஸ்வராஜ்யம் கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் அமெரிக்காசும்மாவிடாது. கனடா சும்மா விடாது. ஆஸ்திரேலியா, தென் ஆபிரிகா, நியூஜிலாந்து முதலிய குடியேற்ற நாடுகள் பொறுத்திருக்க மாட்டா. ப்ரான்ஸிடம் விடுதலைப் ப்ரஸங்கங்களை விரிக்க இங் கிலாந்துக்குச் சிறிதேனும் இடமில்லாமற்போய்விடும். உலக முழுமையிலும் அபகீர்த்தி முற்றும். இங்கிலாந்தின் சத்துருக்கள் பெருமகிழ்ச்சியடைய ஹேது உண்டாகும். இத்தனை உதவிகளுமில்லாது போயினும் இப்போது ஸ்வராஜ்யம் கொடுக்காவிட்டால், ஐர்லாந்து சும்மா இராது. ஸ்வராஜ்யத்தை வற்புறுத்தும் பொருட்டு ஐர்லாந் தியர் ஐர்லாந்திலும், லண்டன், செஸ்டர் முதலிய நகரங் களிலும் என்ன காரியங்கள் செய்து வந்தனரென்பதும், அதல்ை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலியோருக்கு நேர்ந்த அஸெளகர்யங்கள் எவையென்பதும் நேயர்களுக்குத் தெரிந்த ஸங்கதிகளேயாம். இத்தனை பலாத்காரங்களைக் கருதி ஸ்வராஜ்யம் கொடுத்துத் தொலைப்போம் எனிலோ, வட ஐர்லாந்து முதல் மந்திரியாகச் சில தினங்களின் முன்னே முளைத்திருக் கும் ஸர்ஜேம்ஸ் க்ரேக் ஏற்கெனவே போர்க்கொடியைத் துரக்கிவிட்டார். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனி பார்லி மெண்ட் சாசுவதமாக இருக்குமெனில், பிறகு ஐரிஷ் ஸ்வராஜ்யம் என்பதற்கு அர்த்தமே கிடையாது. ஐர்லாந்தை இரண்டாக வெட்டிப் பிறகு ஸ்வராஜ்யம் கொடுப்பதென்ருல், என்ன செய்கை அது! அஃதொருவனை இரண்டாக வெட்டிக் கொன்ற பின்னர் அவனுக்கு மணம் புரிவிப்பதாகக் கூறுதல் போலும். எனவே, அல்ஸ்டர் என்றுெரு பதார்த்தம்