பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 'நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமீது ஸங்கீ தம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நம க மண்டபங்கள், நமது குடிசைகள்இவையனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்ய ஸம்பத்து. காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளளிதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி-இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்-இவையனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து. எனவே, ஆர்ய ஸம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரீகம். இந்த ஸம்பத்தைப் பாது காக்கும்வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்துவிட்டால் இந்த ஜாதியைச் செல் அரித்துவிடும்.” இவ்வாறு பாரதியார் .ெ வ ட் ட வெளிச்சமாக எழுதியிருக்கிரு.ர். தமது கவிதையிலே பாரதியார் ஆரிய' என்ற சொல்லைப்பல இடங்களிலே கையாண்டிருக்கிரு.ர். எடுத்துக் காட்டாகச் சிலவற்றைப் பார்ப்போம். "ஆரிய பூமியில் காரிய ரும்கர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்-வந்தேமாதரம்" -ஜய வந்தே மாதரம் "முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடைவில்?-எங்கள்