பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iፀሃ நாடு. உண்மையில், இப்போது கூட இங்கிலாந்தினலே ஜர்லாந்தைப் போரில் மடக்கி விடமுடியும். அப்படியிருந்தும், உலக முழுமையிலும் எழுச்சி பெற்றிருப்பதாகிய, பெரிதோர் தர்மக் கிளர்ச்சியை முன்னிட்டு ஐர்லாந்துக் கூட இனி ஸ்வராஜ்யமில்லை என்று மறுத்தல் இங்கிலாந்துக்கு ஸாத்யப் படாதென்று தீர்ந்து போய்விட்டது. அப்படியிருக்க, 5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது: முப்பது கோடிஜனங்களுடை யது: இன்றைக்கும் ஜகதீச சந்திரர் முதலியவர்களின் மூலமாக உலகத்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழி காட்டுவது பூமண்டல சரித்திரத்திலே வீரம் முதலிய ராஜ குணங்களில் நிகரற்றதாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப்போகிறீர்கள்? 63. நெல்லிக்காய் கதை நான் சிறு குழந்தையாக இருக்கும்போது, ஹிந்துக் களைப்போலே ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் உலகத் தில் வேறெந்த தேசத்திலும் இல்லையென்றும், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமானமென்றும் சி ல ர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு, உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும் தற்கால இயல் பையும், பலவிதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உலகத்திலுள்ள எந்த ராஜ் யத்தைப்பார்த்த்போதிலும் அங்கு பணமும் அதிகாரமும் இருக்கும்வரை, மனிதர் பரஸ்பர விரோதங்களையும் பொருமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு