பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io அதிதி ஸத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசி யிருக்கிருர். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங் கொடுத்த தாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந் திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸ்மத்துவ ஞானத்தை ஊட்டினர். பூரீரங்கத்தில் எம்பெரு மான் கடைக்குலத்தவராகிய திருப்பாணுழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்துகொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினர். சந்திரனில் ஒரு களங்கம்ஆனல் தீர்க்கக் கூடியது. சந்திரனுக்குள் ஒரு கள்ங்கம் இருப்பதுபோல், இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கமிருக்கிறது. ஆனல் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக்கொள்ளாது. ஞான சூரியராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிருர்கள். அந்தக் களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புறவேண்டி குண கர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு, பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாஸ்னத்தில் வீற்றிருக்கிருள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லோரும் ஹிந்துக்களைக் கை தூக்கிவிடப் புறப்பட்டிருக்கிருர்கள். பரமாத்மா ஒன்று. அவனுக்கு ரிஷிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிருர் களென்று வேதம் சொல்லுகிறது. "பேரானந்தம் பேசி மறையனந்தஞ் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பு"