பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{&# போட்டு வெளியே வர முடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளவுக்குமிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்துவிட்டார்கள். நெடுநேரம் கழிந்த பிறகு, பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணை விழித்துப் பார்க்கும்போது, கை கால்கள் கட்டுண்டு, தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். 'எங்கிருக்கிருேம்? என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. 'நமக்கு யார் இவ்வித மான தீமை செய்திருக்கக் கூடும்?" என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. தாகம் நாக்கை வறட்டிற்று, கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. 'தெய்வமே, என்ன்ைக் கொல்லவா நிச்சயித்து விட்டாய்?" என்று கூவினன். "ஆம்" என்ருெரு குரல் கேட்டது. "ஆமென்கிருயே, நீ யார்?' என்று வினவினன். 'நான் காலன். உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன்' என்று அந்த மறை குரல் சொல்லிற்று. அப்போது திடசித்தன்: 'நான் யெளவனப் பருவத் தில் இருக்கிறேன், அறிவிலும் அன்பிலும் சிறந்த எனது மனைவியையும், சிங்கக் குட்டி போன்ற என் மகனையும் செழிப்பும் புகழும் மிகுந்த என் நாட்டையும் விட்டுவிட்டு உன்னுடன் வருவதில் எனக்கு ஸம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு' என்ருன். மறை குரல் கொல்லென்று சிரித்தது. "நான் எப்போது கொண்டு போகப்படுவேன்?' என்று திடசித்தன் கேட்டான்,