பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 எழுந்துவந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினன். மண்டையுடைந்து செத்தால் பெரி தில்லையென்று துணிவுகொண்டு செய்தான். மண்டை உடையவில்லை. குகையை மூடிச் சென்றவர்கள் அவசரத் தாலே அந்தக் கல்லை மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந் விட்டது. வெளியே வந்து பார்த்தான். சூர்யோதயம் ஆயிற்று. கரோமி, கரோமி, கரோமி, செய்கிறேன், செய்கிறேன், என்று சொல்லிக்கொண்டு தனது ராஜதானி போய்ச் சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் புகையுமில்லை. 65. புதிய கோணங்கி (அதாவது குடுகுடுப்பைக்காரன்) வேதபுரத்தில் ஒரு புதுமாதிரி குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிருன். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத் தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல விந்நியாசங் களும் காட்டுகிருன். தாள விஷயத்திலே மஹா கெட்டிக் காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டிருக்கிருன். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக் கிருன். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவு மாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்ருகப் பொருந்தியிருக்கிறது. ஆள்நெட்டை, தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிருன், நேற்றுக்