பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 எங்கெல்லாமோ சுத்திக்கொண்டு வருகிறேன்” என்ருன். அப்போது நான் சொன்னேன் : 'உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடியவரையில் ஸ்விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக் கிறேன்” என்றேன். அப்போது குடுகுடுக்காரன் சொல்லு கிருன் : 'சாமி, நான் பிறந்த இடந்தெரியாது. என்னு டைய தாயார் முகம் தெரியாது; என்னுடைய தகப்ப னருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். 'ஒன்பது கம்பளத்தார் என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது தஞ்சாவூருக்கு என் தகப்பனர் என்னை அழைத்துக்கொண்டு போனர். அங்கே வைசூரி கண்டு செத்துப்போய்விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்துகொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு கம்பெனி ஏஜண்டு; இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதி வசத்தினல் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக் காவுக்குப்போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி கம்பெனி' கலைந்து போய்விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து