பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வ்ைத் திருக்கிறேன். ஆனலும் பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்துவருகிறேன். ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப்போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்துவந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்ருகத் தெரியும். வேறு சில பாஷை களும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவு பட்டிருக்கிரு.ர்கள். நம்முடைய பரம்ரைத் தொழிலை வைத்துக்கொண்டே ஊரூராகப் போய் இங்குள்ள ஜன்ங்களுக்குக் கூடியவரை நியாயங்கள் சொல்லிக்கொண்டு வரலாமென்று புறப் பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய விருத்தாந்தம்' என்ருன். ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப்போனேன். போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி. 'சாமி வேண்டியதில்லை என்று சொல்லி விட்டு அவன் மறுபடி உடுக்கையடித்துக்கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிருன் : "குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு சாமி மார்க்கெல்லாம் தைரியம் வளருது: தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது; எட்டுலட்சுமியும் ஏறி வளருது, Աահն தொலையுது. பாவந் தொலையுது