பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, கியாயங் தெரியுது; பழைய பயித்தியம் படீலென்று தெளியுது வீரம் வருகுது, மேன்மை கிடைக்குதுசொல்லடி சக்தி, மலையாள பகவதி தர்மம் பெருகுது தர்மம் பெருகுது." என்று சொல்லிக் கொண்டே போனன். அவன் முதுகுப்புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன். 66. லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும் ෆ්‍රH%) 7, 1906 கல்கத்தா யூனிவர்சிடியில் பட்டம் பெறும் இளைஞர் களின் முன்பு லார்டு கர்ஸன் செய்த உபந்நியாசத்தில் ஹிந்துக்களைப் பற்றியும், அவர்களது பிரதான கிரந்தங் களைப் பற்றியும் கூறிய பழிச்சொல் நம்மவர்கள் மனதி லிருந்து ஒருபோதும் நீங்க மாட்டாது. இந்தியர்கள் பெரும்பாலும் அசத்தியவாதிகளென்று அந்த மனிதன் வாய் கூசாமல் பேசினன். கொரியா தேசத்து மந்திரி யிடம் தாம் பொய் வார்த்தை சொல்லி ஏமாற்றியதாகத் தமது புஸ்தகத்திலேயே அவர் எழுதிவைத்திருப்பதை உடனே இத்தேசத்துப் பத்திரிகைகள் எடுத்திக் காட்டின. அப்பொழுதே, அவருக்கு நேர்ந்த அவமானத்திற்குக் கணக்கில்லை. இப்போது மறுபடியும், மிஸ்டர் டி. ஸ்மிட்டன் (Donald Smeaton) என்ற ஒரு ஆங்கிலேயர் லார்டு கர்ஸன் யோக்கியத்தைப்பற்றி ஒர் வேடிக்கையான திருஷ்ட்ாந்தம் தெரிவிக்கிரு.ர். இப்போது மிஸ்டர் ஸ் மி ட் - ன்