பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 பலனடைந்திருக்கின்ருேம், மேற்கொண்டு ஒரு அடி யெடுத்து வைத்திருக்கின்ருேமா, பள்ளத்தில் இறங்கி யிருக்கின்ருேமா? இதையெல்லாம் சிறிது கவனிப்போம். ஆழ்ந்து பார்க்குமிடத்து தமிழ்நாடு முன்னடி யெடுத்து வைத்திருக்கிறதென்பதாகவே .ெ சா ல் ல வேண் டு ம் . ஏனெனில், தெற்கில் தமிழர்கள் முதலாக வடக்கே காஷ் மீரர்கள் வரை நம்மவருக்கெல்லாம் பொது நாடாகிய பாரத பூமியானது அபிவிருத்தியின் பாரிசமாகச் சிறிது நகர்ச்சி ப்ெற்றிருக்கின்றது. நாம் எவ்விதமான.அபிவிருத்தியைக் குறிப்பிடுகிருேம் என்பதை எல்லோரும் எளிதாக அறிந்துகொள்ளக்கூடும். சர்வ அனுகூலங்களுக்கும் பொருள்களுக்கும் மூலாதார மாகிய ஸ்வராஜ்ய செளபாக்கியத்தை நாம் அடைந்தே தீரவேண்டும் என்று பரதகண்டத்துப்பிரதிநிதிகளெல்லாம் இந்நாட்டு முக்கிய நகரத்திலே கூடி நிச்சயம் செய்து கொண்டிருக்கிரு.ர்கள். இதுவரை அங்கங்கே தனித்தனி அறிஞர்கள் இருந்து இவ்விஷயமாய் பிரஸ்தாபங்களும், பிரயத்தனங்களும் செய்துகொண்டிருக்கிருர்கள். ஆனல் தனித்தனியான மனிதர்கள் எத்தனை பெரியோர்களாய் இருந்தபோதிலும் அதிக அனுகூலம் சாதித்துவிட முடியா தல்லவா? தேசப் பிரதிநிதிகளின் மஹா சபையான காங்கிரஸ் இதுவரை இதைக் கவனியாமலிருந்தது. சென்ற தடவை இதைக் கவனித்ததுமட்டுமேயல்லாமல் டிெ மஹாசபை தெய்வ சாகதியாக சரியான நிச்சயமும் செய்து கொண்டுவிட்டது. "ஸ்வராஜ்யமே நமது நோக்கம்: அதற்கு முதற்படியாக அன்னிய வஸ்து திரஸ்கார பிரதிக் கினையைக் கைக்கொள்ளுகிருேம்” என்று இந்நாட்டு முப்பத்து முக்கோடி ஜனங்களின் பிரதிநிதிகள் விரதம் பூண்டுவிட்டார்கள். இந்த விஷயத்தில் தமிழர்களாகிய நாம் வடநாட்டாரைப்போல அத்தனை பிரயாஸை எடுக்க