பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 "செல்வம் கிறைந்தஹிந்து ஸ்தானம்-அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா" என்று கூறி நிறுத்துகிரு.ர். மேலும், "வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா வேத முடையதிந்த நாடு-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு சேதமில் லாதஹறிந்து ஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா' என்று பாப்பாவுக்கு உபதேசிப்பதுபோல நமக்கும் தெளி வாக உணர்த்திவிடுகிரு.ர். அவருடைய பரந்த உள்ளம் பாரத தேசத்தை ஒரே நோக்கிலே இமயம் முதல் குமரிமுனைவரை பார்க்கிறது. பார்க்கும்போது பாரததேசம் அன்னையாகக் காட்சி அளிக் கிறது. எங்கள் தாய் என்று பரவசமெய்திப் பாடுகிருர் பாரதியார் : "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்.எங்கள் தாய்" என்று ஆனந்த மேலீட்டால் பாடிக் களிக்கிரு.ர். இங்கே உள்ள முப்பதுகோடி மக்கள், அவர்கள் பேசும் பலவேறு மொழிகள் எல்லாம் ஐக்கியப்பட்டு ஓர் உயிர், ஓர் உள்ளம் என்ருகிவிடுகின்றன,