பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 "முப்பது கோடி முகமுடை யாள்.உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று கவிஞர் பாடும்போது நாமும் அந்த உண்மையைப் பளிச்சென்று உணர்ந்து மெய் சிலிர்க்கின்ருேம். பாரதியாரின் கவிதை வாக்கு அந்த ரசவாதத்தைச் செய்துவிடுகிறது. "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை' என்ற உணர்வு நம்முள்ளே கொந்தளித்து எழுந்து, பாரத சமுதாயம் வாழ்கவே என்று கவிஞரோடு சேர்ந்து முழங்கும்படி செய்து விடுகிறது. "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இக்காட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்" என்று மார் தட்டுகிருேம். பாரத தேசம் என்னும் மற்ருெரு அற்புதமான கவிதையிலே நமது நாட்டை எப்படிப் பாரதியார் ஒருங் கிணைத்துக் காண்கிருர் என்பது மிக நன்முக வெளிப்படு கின்றது. "வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்" என்று ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ருர்,