பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அதில் வந்த கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றை இந்த நூலில் இணைத்திருக்கிறேன். பாரதி தரிசனம் என்ற தலைப்பில் சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீட்டகம் அரிதில் முயன்று இதுவரை இரண்டு பாகங்களாக இந்தியா வார இதழ் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அவர்களுடைய அன்பான அனுமதி யுடன் இக் கட்டுரைகள் நன்றியறிதலோடு இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் எழுதியவர் பெயர் குறிக்கப்படாமல் வெளியாகி யிருப்பினும் பாரதியாரின் வேகத்தையும், தேசப் பற்றையும் இவை நன்கு வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. பாரதியாரே எழுதியவை என்று கொள்வதிலும் தவறில்லை என்று கருதலாம். பாரத தேசத்தின் மீதிருந்த அளவு கடந்த பக்தியை யும், வேகமாக நமது மக்கள் துணிந்து விடுதலைப் போரை நடத்தவில்லையே என்ற ஆத்திரத்தையும், இந்தியாவின் உயர்வையும், லோக குருவாக விளங்கக்கூடிய தகுதியையும் காட்டக்கூடிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் ஆகிய வற்றையெல்லாம் திரட்டி இந்நூலில் கொடுத்திருக் கிறேன். சேர்க்கப்பெருமல் உள்ளவையும் உண்டு. ஆனல், மாதிரிக்கு ஒவ்வொன்ருக எடுத்துத் தரவேண்டும் என்று பெரிதும் முயன்றிருக்கிறேன். பாரத தேசத்தைப் பற்றிப் பாரதியாரின் உள்ளத்திலே ஏதாவது ஒரு முக்கிய மான அம்சத்தைக் காட்டும் எந்த எழுத்தாவது விட்டுப் போயிருந்தால் அதை அடுத்த பதிப்பில் சேர்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் கிளர்ந்து எழவில்லையே, மந்த கதியில் துரங்கி நடைபோடுகின்ருர்களே என்பதைப் பார்க்கும்போது பாரதியாருக்கு அடங்காத கோபம் பொங்கி எழுகின்றது.