பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 போ போபோ என்று சொல்லும்போது பாரதியாரின் அழல் தெறிக்கும் கண்களையும், முறுக்கு மீசையையும் கற்பனை செய்துபாருங்கள். அவருடைய இடிக் குரல் காதில் விழவில்லையா? 'தெளிவுபெற்ற மதியினய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமைகண் டிரங்குவாய் வா வா வா ஏறுபோல் நடையினுய் வா வா வா" 米 sk 球 'கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற்றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒருபெருஞ் செயல்செய்வாய் வா வா வா' புன்சிரிப்புத் தவழப் பாரதியார் அழைக்கின்ருர்; மறைந்தும் மறையாமல் தமது அமர எழுத்துக்களின் மூலமாக அழைக்கின்ருர், நாம்தாம் இன்னும் அவருடைய எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ருமல் இருப்பதை நெஞ்சு விம்மி நாணத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிருேம். ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ. போய் விட்டார்களா? ஜாதிகள் மறைந்தனவா? பாரதியார் வருக வருக வருக என்று அழைக்கும் இளையபாரதமும் வந்துவிட்டதா? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிருேம்? எண்ணிப் பாருங்கள். விடுதலை கிடைத்த பிறகும் நமது போக்கு எப்படி இருக்கிறது? Larr. Lurro-2