பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே: மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே, நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே. (பாரத) சிந்து நதியின்மிசை நிலவினி லே சேரநன் னட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம். (பாரத) கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்: காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்; சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்: ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்: கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் காசினி வணிகருக்கு அவைகொடுப்போம். (பாரத) ஆயுதம் செய்வோம்நல்ல காகிதம்செய் வோம்: ஆலைகள்வைப் போம்கல்விச் சாலைகள் வைப்போம்: ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்: உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) குடைகள்செய்வோம்.உழு படைகள்செய்வோம்: கோணிகள்செய்வோம்இரும் பாணிகள் செய்வோம்: நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்புல்கள்.செய்வோம். (பாரத)