பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 3. 35 இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் கன்னலும் தேனும் கனியும்இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும்.எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே. 6. ஜய பாரத! சிறந்து நின்ற சிந்தையோடு தேயம் நூறு வென்றி.வள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன யோழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்வி தேய வண்மை தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே! வில்லர் வாழ்வு குன்றி ஒய வீர வாளும் மாயவே வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய் மெய்ம்மை நூல்கள் தேயவும்