பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 3. 4. 5. 47 தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்ருேம் விழிதுயில் கின்றன. இன்னும்எம் தாயே! வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன: ஆர்த்தன முரசம்: . பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்; வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! வீதியெ லாம்.அணு குற்றனர் மாதர்: தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன் சீர்த்திரு நாமமும் ஒதிநிற் கின்ருர்: அள்ளிய தெள்ளமு தன்னைனம் அன்னை! ஆருயிரேlபள்ளி யெழுந்தரு ளாயே! பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்: பார்மிசை நின்னெளி காணுதற்கு அலந்தோம்: கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்: சுருதிகள் பயந்தன; சாத்திரம் கோடி சொல்லரு மாண்பினை ஈன்றன, அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்ருய்! நிர்மலை யே!பள்ளி யெழுந்தரு ளாயே! நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலே நீயறி யாயோ? பொன்னனை யாய்! வெண் பணிமுடி யிமயப் பொருப்பின்ன் ஈந்த பெருந்தவப் பொருளே! என்ன தவங்கள்செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே? இன்னமும் துயிலுதி யேல்.இது நன்ருே? இன்னுயி ரே!பள்ளி யெழுந்தரு ளாயே! மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? கோமகளே!பெரும் பாரதர்க் கரசே! t in', kum". -3