பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 முரசு ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை ஒசை வளர்முரசம் ஒதுவாய்!-பேசுகவோ சத்தியமே, செய்க தருமமே என்ருெலிசெய் முத்திதரும் வேத முரசு. 8 தார் வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடரி தாராள் புனையுமணித் தார்கூருய்-சேராரை முற்ருக் குறுநகையால் முற்றுவித்துத் தானெளிர்வாள் பொற்ரு மரைத்தார் புனைந்து. 9 கொடி கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும் மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? அடிப்பணிவார் நன்ருரத் தீயார் நலிவுறவே வீசுமொளி குன்ரு வயிரக் கொடி. 10 13. தாயின் மணிக்கொடி பாரீர்! (தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு) பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்!-அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)