பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 7. எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல்- பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்; நண்ணிய பெருங்கலைகள்-பத்து நாலாயிரங்கோடி. நயந்துநின்று, புண்ணிய நாட்டினிலே-இவர் பொறியற்ற விலங்குகள் போல் வாழ்வார். (நெஞ்சு) 15. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் |போகின்ற பாரதத்தைச் சபித்தல்) 1. வலிமை யற்ற தோளினய் போ போ போ மார்பி லேஒடுங்கினய் போ போ போ பொலிவி லாமு கத்தினய் போபோ போ பொறியி ழந்த விழியினய் போபோ போ ஒலியிழந்த குரலிய்ை போ போ போ ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 2. இன்று பார தத்திடை நாய்போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறில் அஞ்சுவாம் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 3. வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ