பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 குழுவினர் கடினல் நாட்டுக்கு எவ்வாறு பிற்காலத்தில் சேவை செய்வது என்பது பற்றிப் பல்வேறு கனவு காண்பார்கள். பலருடைய கனவுகள் ஒரளவு நனவாக மலரும் பாக்கியம் பெற்ருர்கள். அதில் துரன்தான் தம் கனவுகளில் பெரும் பகுதியில் வெற்றிகண்டு வாழ்க்கை நிறைவு பெற்றவராக இன்று விளங்குகிரு.ர். அவர் கண்ட கனவெல்லாம் தமிழைப் பற்றியது. தமிழிலே கவிதைகள் இயற்றவேண்டும; கருத் துக்கள் ததும்பக் கட்டுரைகள் எழுதவேண்டும்; தமிழிலே புதுமணம் மணக்கச் செய்யவேண்டும்-இவ்வாறு அவர் விரும்பிஞர். பிற்காலத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் பொறுப் பேற்று, தமிழ்க் கலைக்களஞ்சியத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்கினர். புதிய புதிய கவிதைகள் புனைந்து தமிழுக்குச் சேவை செய்தார். குழந்தை இலக்கியத்திலே ஒரு புதிய சகாப்தத்தையே ஏற்படுத்தி எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி யாக விளங்குகிருர். தமிழிலே புதிய சாகித்யங்களைத் தோற்றுவித்துத் தமிழ் இசை வளர்ச்சிக்குப் பெரும் சேவை செய்து பல பெருஞ் சிறப்புக்களைப் பெற்ருர். இவ்வாறு பிற்காலத்தில் மலரவிருக்கும் தூரன் மாணவகை இருந்த காலத்திலேயே அவருடைய திறமை வெளிப்பட லாயிற்று. வனமலர்ச் சங்கத்தின் ஆதரவில் பித்தன் என்ற ஒரு பத்திரிகையை நடத்திவந்தோம். அதன் ஆசிரியராக அமைந்த தூரன் தம்முடைய எழுத்து வன்மையின் மூலம் எங்களுடைய பெருமதிப்பைப் பெற்றிருந்தார். பித்தன் மூலமாகச் சுப்பிரமணிய பாரதியாரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்காலத்தில் பாரதி பாடல்கள் முழங்காத காங்கிரஸ் கூட்டங்களே இல்லை. அந்தப் பாரதியாரின் வாழ்க்கைச் சரிதையை அவர் இயற்றி அதுவரையிலும் மறைந்து கிடந்த கவிதைகளை, உரைநடை இலக்கியங்களே. தேனியைப் போல் பல இடங்களுக்குச் சென்று சேகரித்து எங்களுக்கு வழங்குவார். அந்தப் பணியைத் தொடர்ந்து