பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 நண்ணும் பாட்டிளுெடு தாளம்-மிக நன்ரு வுளத்தழுந்தல் வேண்டும்-பல பண்ணிற் கோடிவகை இன்பம்-நான் பாடத் திறனடைதல் வேண்டும். கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப் போத்தைச் சிங்கவே ருக்கல்-மண்ணை வெல்லத் திணிப்புவரச் செய்தல்-என விந்தை தோன்றிடஇந் நாட்டை-நான் தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி சூழும் வீரவறி வாண்மை கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல் கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை நாடும் படிக்குவினை செய்து-இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கவி சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி தாயே! உனக்கரிய துண்டோ?-மதி மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம்-எனை முற்றும் விட்டகல வேண்டும். ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும்-புல அச்சம் போயொழிதல் வேண்டும்-பல பையச் சொல்லுவதிங் கென்னே!-முன்னைப் பார்த்தன் கண்ணனிவர் நேரா-என உய்யக் கொண்டருள வேண்டும்-அடி உன்னைக் கோடிமுறை தொழுதேன்-இனி வையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னை வாழி! நின்னதருள் வாழி! ஒம் காளி வலிய சாமுண்டீ! ஓங்காரத் தலைவி! என் இராணி! Ꮧ0