பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வங்தே மாதரம் ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்டவெ மன்னையின் மீதுதிகழ் அன்பெனு மென்கொடி வாடிய காலை யதற்குயிர் தந்திடுவான் மாரி யெனும்படி வந்து சிறந்தது வந்தே மாதரமே மாணுயர் பாரத தேவியின் மந்திரம் வந்தே மாதரமே வீரிய ஞான மரும்புகழ் மங்கிட மேவிநல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை யிருட்கணம் வீவுற வங்கமகா வாரிதி மீதி லெழுந்த இளங்கதிர் வந்தே மாதரமே வாழிந லாரிய தேவியின் மந்திரம் வந்தே மாதரமே. காரடர் பொன்முடி, வானி மயந்தரு கங்கை வரம்பினிலும் கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலி காதல் செயாயிடையும் வீரர்கள் மிஞ்சி விளங்கு புமுைதல் வேறுள ஆர்களிலும் விஞ்சை யெனும்படி யன்புடன் யாரும் வியந்திடு மந்திரமும் பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும் பாதக ரோதினு மேதக வுற்றிடு பண்புயர் மந்திரமும்