பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அதிரத மன்னர்காள் துரகத் ததிபர்காள்! எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! கால னுருக்கொளும் கணேதுரந் திடுவீர். மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! மாற்றலர் தம்புலே நாற்றமே யறியா ஆற்றல்கொண் டிருந்ததிவ் வரும்புகழ் நாடு! வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும் நிர்மல முனிவரும் நிறைந்தநன் டுை! வீரரைப் பெருத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! பாரதப் பூமி பழம்பெரும் பூமி: நீரதன் புதல்வர்; இந் நினைவகற் ரு தீர்! பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர்; இந் நினைவகற் ருதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடு நாடு கங்கையும் சிந்துவும் தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்குபொன் டுை! 10 15 20 25 30 35